சின்னசேலம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


சின்னசேலம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தென்செட்டியந்தல், பைத்தந்துறை, நாககுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சின்னசேலத்தை அடுத்த தென்செட்டியந்தல் கிராம மேலக்காடு காட்டுக்கொட்டாயில் உள்ள நிலத்தில் மரவள்ளி பயிர்களுக்கு இடையே சின்னப்பையன் மகன் மணி(வயது 30), நாககுப்பம் மந்தைவெளி பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் சைடுசுரேஷ் ஆகிய இருவரும் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் மணியை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சைடு சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story