முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ், சேது சமுத்திரத் திட்டம், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனு குறித்து கேள்வி எழுப்ப அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story