செங்காந்தள் மலர் விதைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்


செங்காந்தள் மலர் விதைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
x

செங்காந்தள் மலர் விதைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

கரூர்

அரவக்குறிச்சி அருகே ரங்கப்பகவுண்டர் வலசு பகுதியில் செங்காந்தள் மலர் விதை சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்பி.ஆர்.பாண்டியன் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அரவாக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் தாலுகா பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விலை நிலங்களில் செங்காந்தள் மலர் விதை சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி பயிரிடுவதற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அறுவடை காலங்களில் கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் மத்தியில் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள். ஒரு கிலோ விதை மேலை நாடுகளில் ரூ.25 ஆயிரம் வரையிலும் விலை போவதாக சொல்லப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட உயரிய வகையான இந்த விதைகளை தேசிய அளவிலான வியாபாரிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து விவசாயிகளை பழி வாங்கி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதம் அளித்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



Next Story