நடைபயிற்சி சென்ற சார்பதிவாளரிடம் செல்போன் பறிப்பு


நடைபயிற்சி சென்ற சார்பதிவாளரிடம் செல்போன் பறிப்பு
x

சென்னை அண்ணாநகரில் நடைபயிற்சி சென்ற சார்பதிவாளரிடம் செல்போன் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை

சென்னை அண்ணாநகர் 12-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜமுனியப்பன் (வயது 31). சார்பதிவாளரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராஜமுனியப்பனிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story