அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
x

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே காவேரிநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் யாதையா ஆலுகோன்டா, பாட்னாவை சேர்ந்த டாக்டர் ப்ரீத்தி சின்ஹா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையின் சுகாதாரம், மருந்து இருப்பு, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மகப்பேறு சிகிச்சை, கடந்த ஓராண்டாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரம், மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது புதுக்கோட்டை துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்)ராம்கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் நல்லபெருமாள், நிலைய மருத்துவர் கோகுல், மாவட்ட தர மதிப்பீட்டு குழுவினர் மற்றும் அன்னவாசல் வட்டார மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story