மணல் கடத்தியவருக்கு வலைவீச்சு


மணல் கடத்தியவருக்கு வலைவீச்சு
x

திருவள்ளூர் அருகே மோட்டார் வாகனத்தில் மணல் கடத்தி வந்த நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்று தடுப்பணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் அந்த வண்டியில் வந்தவர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி நபரை தேடி வருகிறார்கள்.


Next Story