செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு்ள்ளது.

செங்கல்பட்டு

தமிழக போலீஸ் துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் காவலர் (ஆப் இ-பீட்) செயலியை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் படியும் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா அறிவுறுத்தலின் படியும் நேற்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம், மாமல்லபுரம் போலீல் நிலையம், மற்றும் மதுராந்தகம் போலீஸ் நிலையங்களை முன்னோட்டமாக கொண்டு அறிமுகம் செய்தார்.

இந்த திட்டம் இரவு மற்றும் பகல் ரோந்து செல்லும் போலீசார் ஸ்மார்ட் காவலர் ஆப் என்ற ஆன்ட்ராய்டு மொபைல் செயலியில் தனது ரோந்து பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையம், வங்கி, பூட்டிய வீடுகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்கு சென்று தணிக்கை செய்யும் போது அதன் விவரங்களை ஆன்லைன் முறையில் மேற்படி செயலியின் மூலமாக பதிவேற்றம் செய்வர்.

மேலும் அவரவர் சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்கள், வராலாற்று பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள் ஆகியோர்களின் நடவடிக்கைகளை மேற்படி செல்போன் செயலி மூலம் கண்காணித்து அதனை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மேற்படி ஸ்மார்ட் காவலர் ஆப் மூலம் கண்காணித்து போலீசாருக்கு அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி குற்றம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது பூட்டிய விடுகள் பற்றிய விவரங்களை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து சென்றால் அந்த இடங்கள் பற்றிய விவரங்களை மேற்படி செயலியில் பதிவேற்றம் செய்து ரோந்து போலீசார் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிபடுத்தப்பட்டு குற்றம் நடைபெறாமல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பரத், துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story