தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு


தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு
x

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக பிளைவுட் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டு குமார் யாதவ் (வயது 19) என்ற தொழிலாளி பெயிண்ட்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இங்கு நேற்று மாலை லேசான மழையுடன் இடி. மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தபோது, தொழிற்சாலையில் உள்ள சுமார் 30 மீட்டர் உயரம் கொண்ட டவர் மீது ஏறி அவர் பணி செய்து கொண்டிருந்தபோது, திடீரென மின்னல் தாக்கியதில் உடலில் பலத்த தீக்காயம் அடைந்தார்.

இதன் காரணமாக அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின்னல் தாக்கி உயிரிழந்த குட்டு குமார் யாதவ்வின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story