தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்து பட்டார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் உள்ள கொளப்பாக்கம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு ஆய்வில் ஈடுபட்டபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெள்ளதுரை (வயது 48), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story