குடி போதையில் வகுப்பறையில் மாணவிகளை கேலி,கிண்டல் செய்த பிளஸ் 2 மாணவன்: தட்டி கேட்ட தலைமை ஆசிரியர் மண்டை உடைப்பு...!


குடி போதையில் வகுப்பறையில் மாணவிகளை கேலி,கிண்டல் செய்த பிளஸ் 2 மாணவன்: தட்டி கேட்ட தலைமை ஆசிரியர் மண்டை உடைப்பு...!
x
தினத்தந்தி 16 Nov 2022 11:50 AM GMT (Updated: 16 Nov 2022 12:07 PM GMT)

விழுப்புரம் அருகே அரசு பள்ளியின் தலைமை ஆசிரியரை குடி போதையில் பிளஸ் 2 மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதே போல பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 17) என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவர் அடிக்கடி குடிபோதையில் வந்து மாணவிகளை கேலி செய்வது வழக்கம். நேற்று காலையிலும் வழக்கம்போல் குடிபோதையில் வந்தார். இதனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் கண்டித்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சக ஆசிரியர்கள் மாணவனை கண்டித்து அனுப்பினர். நேற்று மாலை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் தனது அறையில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த மாணவர் விக்னேஷ் திடீர் என தலைமை ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதில் காயம் அடைந்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மாணவர் விக்னேசை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story