சட்டம் தனது கடமையை செய்யும்: சீருடையில் காவல் வாகனத்தில் உறங்கிய காவலர்...!


சட்டம் தனது கடமையை செய்யும்: சீருடையில் காவல் வாகனத்தில் உறங்கிய காவலர்...!
x

சீருடையில் காவலர் ஒருவர் காவல்துறை வாகனத்தில் தூங்குவது தவறானது என்பது போல் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்குட்பட்ட சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவும் பகலுமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருபவர் 55 வயதான எஸ் எஸ் ஐ ரவி. இவர் சீருடையுடன் போலீஸ் வாகனத்தில் தூங்குவதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பரவ விட்டுள்ளார். இது தவறு என சிலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் தனக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் கண் அயர்ந்து தூங்குவது எப்படி தவறாகும் எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர் வேலை முடிந்து தூங்கினால் பிரச்சினை இல்லை. வேலை நேரத்தில் சீருடையில் தூங்கினால் தப்பித்து செல்லும் குற்றவாளிகளை எப்படி பிடிப்பார் என்ற என விவாதம் நடந்து வருகிறது.


Next Story