தலைவாசல் அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்து - கல்லூரி மாணவிகள் உட்பட 20 பேர் படுகாயம்


தலைவாசல் அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்து - கல்லூரி மாணவிகள் உட்பட 20 பேர் படுகாயம்
x

தலைவாசல் அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நத்தக்கரை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையில் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டரை முந்திச் செல்வதற்காக பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டிராக்டரின் மீது மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியில் இவர்களை மீட்டு 108 வாகனம் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து அறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story