தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
ரிஷிவந்தியம் அருகே தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அடுத்த வாணாபுரம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வருவதற்காக பயன்படுத்திவரப்பட்ட பஸ் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் அந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பள்ளி பஸ் தீயில் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்த புகாரின் பேரில் பகண்ைடகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சுக்கு யாரேனும் தீ வைத்தார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.