பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

பாலாற்றில் மணல் எடுக்க டெண்டர் ரிடப்பட்டதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ஆற்காட்டை அடுத்த இசையனூர் பாலாற்றில் மணல் எடுப்பதற்கு அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பாலாற்றில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. லாரிகளில் மணல் ஏற்றிச் செல்ல டோக்கன் வழங்கும் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் இதனை ரத்துரு செயயக்கோரி ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இசையனூர் பாலாற்றில் போராட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கி பாலாற்றில் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டி கண்டன குரல் எழுப்பினார்.

இதில் மாவட்ட தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ஞானசவுந்தரி மாநில செயற்குழு உறுப்பினர் காவனூர் ந.சுப்பிரமணி ஒன்றிய செயலாளர்கள் நீலகண்டன், சரவணன், விக்ரம், தேவேந்திரன், பரத் ஒன்றிய தலைவர் திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story