ரோஜா பூ ஒன்று ரூ.50-க்கு விற்பனை


ரோஜா பூ ஒன்று ரூ.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 Feb 2023 1:00 AM IST (Updated: 15 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

காதலர் தினத்தையொட்டி நேற்று நாமக்கல்லில் ரோஜா பூ ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காதலர் தினம்

காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் நகரிலும் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள், தங்களது காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையொட்டி நாமக்கல் பஸ்நிலையம், ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மசாமி கோவில், ரெங்கநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காதலர்கள் ஜோடியாக சென்றதை காண முடிந்தது.

வழக்கமாக மலைக்கோட்டையில் காதலர்கள் அதிக அளவில் கூடுவார்கள். அவர்களில் சிலர் அத்துமீறுவதாக போலீசாருக்கு புகார் வந்ததை தொடர்ந்து, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் நேற்று மலைக்கோட்டைக்கு யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.

ரோஜா பூ ரூ.50-க்கு விற்பனை

இதற்கிடையே காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று ரோஜா பூவுக்கு கடும் கிராக்கி இருந்தது. இதனால் சாதாரண நாட்களில் ரூ.10 மற்றும் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ ஒன்று நேற்று ரூ.50 வரை விற்பனையானது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாத காதலர்கள், ரோஜா பூக்களை வாங்கி தங்களது காதலிக்கு பரிசாக கொடுத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

மேலும் திருமணமான கணவர்கள், அவர்களின் காதலை மனைவிக்கு வெளிப்படுத்தும் வகையில் ரோஜா பூக்களை வாங்கி கொடுப்பதையும் காண முடிந்தது. அதேபோல் நகர் முழுவதும் காதலர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story