வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x

வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை

பேரையூர்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சிலார்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). சம்பவத்தன்று இரவு ராஜேஷ், அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே தலையில் பலத்த ரத்தகாயங்களுடன் மயங்கி நிலையில் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை ரத்தக் காயப்படுத்திய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கட்டயதேவன்பட்டியை சேர்ந்த ரமேஷ் கண்ணா (23), விஜயகுமார் (37) ஆகியோரை டி.கல்லுப்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று ராஜேஷ் உடன் இருவருக்கும் டாஸ்மாக் பாரில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். ரமேஷ் கண்ணாவும் விஜயகுமாரும் ராஜேஷை பின் தொடர்ந்து, சிலார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆயுதங்களால் ராஜேஷின் தலையில் அரிவாளால் வெட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தி தப்பி சென்று விட்டனர்.2 பேரையும் டி.கல்லுப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story