புயல் நிவாரண பொருட்களை உரிய முறையில் அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு ..!
நிவாரணம் தேவைப்படும் பகுதிகளுக்கு பொருட்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அனுப்பும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
`மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புயல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணம் தேவைப்படும் பகுதிகளுக்கு பொருட்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அனுப்பும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நிவாரணம் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 73977 66651 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story