திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர்


திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர்
x

திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

திருவொற்றியூர் கலைஞர் நகர் 1-வது தெருவில் தூய்மைப் பணியாளர்கள் தேவி மற்றும் நவீன்குமார் இருவரும் நேற்று முன்தினம் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பாடல் போட்டு வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த சரஸ்வதி நகரைச் சேர்ந்த பிரசன்னா (வயது 32) என்பவர், "பாட்டு போட்டுதான் நீ குப்பையை சேகரிப்பாயா?" என்று தகாத வார்த்தைகளால் பேசியதுடன், "உடனடியாக பாட்டை நிறுத்து" என்று தேவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

அதை சக தூய்மை பணியாளர் நவீன்குமார் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரசன்னா, தூய்மை பணியாளர் நவீன்குமாரை தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து கேள்விப்பட்டதும் அந்த பகுதியில் வேலை செய்த சக தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தேவி, நவீன்குமார் ஆகியோருடன் சாத்தாங்காடு போலீஸ் நிலையம் முன்பு துப்புரவு வாகனங்களை நிறுத்தி விட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story