காரில் சென்ற வாலிபரை வழிமறித்து தாக்குதல்
கடலூர் முதுநகரில் காரில் சென்ற வாலிபரை வழிமறித்து தாக்குதல் பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது
கடலூர்
கடலூர் முதுநகர்
கடலூர் முதுநகர் அருகே உள்ள வழிசோதனைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரேம்குமார்(வயது 29). தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினரான இவர் சம்பவத்தன்று தனது ஊருக்கு சுத்துகுளம் வழியாக அவரது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இறுதி ஊர்வலத்தில் வந்திருந்த சுத்துகுளம் பகுதியை சேர்ந்த பா.ம.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ்(34), உறுப்பினர் அன்பு(31), மற்றும் சேட்டு ஆகிய 3 பேரும் சேர்ந்து முன் விரோதம் காரணமாக பிரேம்குமாரை தாக்கி, அவரது கார் மற்றும் காரில் இருந்த கட்சி கொடியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அன்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story