பெண் போலீசிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது


பெண் போலீசிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது
x

பெண் போலீசிடம் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே தெற்கு வாண்டான்விடுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). இவர், தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து விட்டதாக இவரது 2-வது மனைவி ராஜேஸ்வரி ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் முத்துக்குமாரை ேபாலீசார் பலமுறை அழைத்தும் அவர் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மது போதையில் முத்துக்குமார் சென்றார். பின்னர் அங்கு பணியில் இருந்த பெண் போலீசான வளர்மதி, ரேவதி ஆகியோரிடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story