படப்பை அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி


படப்பை அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
x

படப்பை அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

வேன்- பஸ் மோதல்

காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கோழிகளை ஏற்றி கொண்டு வந்த வேன் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

சாவு

இதில் வேன் கிளீனரான திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (வயது 19) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. டிரைவர் பலத்த காயம் அடைந்தார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த வேன் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அபினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் வேனை ஒட்டி வந்தவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்த கவுஷ்பாஷா (வயது 40) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story