வீடு புகுந்து சைக்கிள் திருடிய வாலிபர் கைது
வீடு புகுந்து சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை எஸ்.எஸ்.காலனி அலமேலு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). சம்பவத்தன்று இவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பேட்டரி சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து கணேசன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சைக்கிள் திருடிய ஆசாமியை தேடி வந்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் ஒருவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து அந்த சைக்கிளை திருடிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரின் அடையாளத்தை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியை சேர்ந்த சையது அபுதாஹிர் (31) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story