கடன் தருவதாக முன்பணம் பெற்று ஏமாற்றிய வாலிபர் கைது


கடன் தருவதாக  முன்பணம் பெற்று ஏமாற்றிய வாலிபர் கைது
x

கடன் தருவதாக முன்பணம் பெற்று ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் எஸ்.வி.பி.என்.எஸ். தெருவை சேர்ந்த கார்த்திகேயராஜா மற்றும் அவரது மனைவி அருணா மகா ஸ்ரீ ஆகிய 2 பேரும் கடந்த 2 தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் அருணா மகா ஸ்ரீ போலீசாருக்கு எழுதிய கடிதத்தில் முத்து மகாராஜா என்பவர் ரூ. 5 லட்சம் கடன் தருவதாக கூறி முன்பணம் பெற்றதாகவும், முன்பணத்தை திருப்பி தராமலும், கடன் தராமலும் ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து மகாராஜா (வயது 26) என்பவரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையில் பேஸ்புக் மூலம் முத்து மகாராஜா கடன் தருவது பற்றிய தகவலறிந்த அருணா மகா ஸ்ரீ, முத்து மகாராஜாவிடம் ரூ.5 லட்சம் கடன் தருமாறு கேட்டதாகவும், அதற்கு முத்து மகாராஜா ரூ.6ஆயிரம் முன் பணம் அனுப்புமாறும் கேட்டுள்ளார். அருணா மகா ஸ்ரீ ரூ.6 ஆயிரம் முன் பணம் அனுப்பியுள்ளார். கடன் தராமல் முத்து மகாராஜா தாமதப்படுத்தி வந்தததால் முத்து மகாராஜா தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்த அருணா மகா ஸ்ரீ மனவேதனையால் கணவருடன் சேர்ந்து தற்கொலை முடிவு எடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முத்து மகாராஜாவை பண மோசடி செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் கைது ெசய்தனர்.

1 More update

Related Tags :
Next Story