பஸ்சில் பயணியிடம் பண ம் திருடிய வாலிபர் கைது


பஸ்சில் பயணியிடம் பண ம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:17+05:30)

மயிலாடுதுறையில் பஸ்சில் பயணியிடம் பண ம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் சிரமப்பட்டு ராஜேந்திரன் பஸ்சிற்குள் ஏறி உள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்டு ஒருவர் ராஜேந்திரனின் பாக்கெட்டில் இருந்த மணி பர்சை திருடியுள்ளார்.. இதனை பார்த்த சக பயணிகள், அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படை த்தனர். பின்னர் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், வேலூர் மாவட்டம் பழை ய காட்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆஞ்சநேயர் மகன் ஜீவா (33) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின் பே ரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story