பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது


பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
x

பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் கூட்டுசாலை அருகே வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கையில் உருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.

உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர், கோலியனூர் கால்நடை மருத்துவமனை வீதி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சூர்யா (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story