வெயிலின் தாக்கத்தால் கட்டடத்தில் கரும்புகையுடன் பற்றியெரிந்த தீ..ராயப்பேட்டையில் பரபரப்பு


வெயிலின் தாக்கத்தால் கட்டடத்தில் கரும்புகையுடன் பற்றியெரிந்த தீ..ராயப்பேட்டையில் பரபரப்பு
x

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நான்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் வணிகவளகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள்

செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மின் கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பரவி கட்டத்தின் மேல் தளத்தில் உள்ள செல்போன் டவரிலும் தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமாய் காட்சியளித்தது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மயிலாப்பூர்,தேனாம்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story