கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து


கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து
x

விழுப்புரத்தில் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு அரவைப்பணிக்காக முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் ஒன்று நேற்று மாலை புறப்பட்டது. இந்த டிராக்டர், அதிக பாரம் தாங்காமல் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே மாம்பழப்பட்டு சாலையில் திடீரென கவிழ்ந்தது. இதில் அங்குள்ள அரசு மருத்துவமனையின் மதில்சுவரில் டிராக்டர் டிரெய்லருடன் கவிழ்ந்ததில் அந்த சுவர் உடைந்து சேதமடைந்தது. ஆனால் அந்த சமயத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே விழுப்புரம் மேற்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த கரும்புகளும் டிராக்டரும் அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story