காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது


காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 9 Aug 2023 3:15 AM IST (Updated: 9 Aug 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது.

நீலகிரி

கூடலூர்

ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலத்துக்கு தினமும் லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஊட்டியில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு லாரி ஒன்று கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மேல் கூடலூர் புனித மரியன்னை ஆலயம் எதிரே வளைவில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். மேலும் லாரியில் இருந்த காய்கறி மூட்டைகள் வெளியே விழுந்தன. தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story