ஊத்துக்கோட்டை அருகே போதிய வருமானம் இல்லாததால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஊத்துக்கோட்டை அருகே போதிய வருமானம் இல்லாததால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

போதிய வருமானம் இல்லாததால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

வேன் டிரைவர்

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பங்குடி அருகே உள்ள காமராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41). வேன் டிரைவர். இவரது மனைவி கஸ்தூரி (38). பிரகாஷ் தற்போது பெரியபாளையம் அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேன் ஓட்டி வந்தார். வேன் ஓட்டுவதால் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

தற்கொலை

இந்நிலையில் அவர் தங்கி இருந்த விடுதி அறையில் நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story