வீட்டின் கதவை தட்டிய காட்டு யானை


வீட்டின் கதவை தட்டிய காட்டு யானை
x
தினத்தந்தி 20 July 2023 2:45 AM IST (Updated: 20 July 2023 4:10 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை தட்டிய காட்டு யானை

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே படச்சேரி மாரியம்மன் கோவில் பகுதிக்குள் நேற்று முன்தினம் அதிகாலையில் காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து லீலா என்பவரது வீட்டு கதவை தட்டியது. உடனே அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது காட்டுயானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை காட்டுயானை துரத்தி வந்து தாக்க முயன்றது. எனினும் சுதாரித்துக்கொண்ட அவர், வீட்டுக்குள் ஓடி வந்து கதவை பூட்டிக்கொண்டார். மேலும் வீட்டுக்குள் தவறி விழுந்ததில் காயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். தொடர்ந்து கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் சேரம்பாடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story