தாய், அண்ணன் இறந்த சோகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை


தாய், அண்ணன் இறந்த சோகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை
x

தாய், அண்ணன் இறந்த சோகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா காக்கலூர் காலனியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 27). இவருக்கு பள்ளிப்பட்டு அருகே புண்ணியம் இருளர் காலனியை சேர்ந்த நரசிம்மன் (40) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் யாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில் சுகன்யாவின் தாய், மற்றும் அண்ணன் அடுத்தடுத்து இறந்து விட்டனர். இதனால் மனவேதனையில் இருந்த சுகன்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதனை அடுத்து சற்று நேரத்தில் அங்கு வந்த அவரது கணவர் நரசிம்மன் மனைவி மயங்கி விழுந்ததை கண்டு அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சுகன்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சுகன்யாவின் தந்தை பெரியப்பா பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story