கணவரைப் பிரிந்த சோகத்தில் 10 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்


கணவரைப் பிரிந்த சோகத்தில் 10 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்
x
தினத்தந்தி 15 Feb 2024 1:51 AM IST (Updated: 15 Feb 2024 1:28 PM IST)
t-max-icont-min-icon

சில மாதங்களுக்கு தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

சிவகாசி,

கணவரைப் பிரிந்த சோகத்தில் தனது 10 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. 24 வயதேயான பொறியியல் பட்டதாரியான இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மகேஷ்குமார் என்பவருடன் திருமணமான நிலையில், அவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒருவர் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால், குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்த சுப்புலட்சுமி, கணவரை பிரிந்த சோகத்தில் தன் 10 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாய் மற்றும் மகளின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னனி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story