சோழவந்தான் அருகே வளர்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பெண் சாவு


சோழவந்தான் அருகே வளர்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பெண் சாவு
x

சோழவந்தான் அருகே வளர்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த நடுமுதலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி ஜெயமணி அம்மாள் (வயது64). இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றனர். ஜெயமணி அம்மாள் ஜல்லிக்கட்டு காளைக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காளை அவரை முட்டித்தள்ளியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story