நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை

மதுரை எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ராகுல் மனைவி சுபஸ்ரீ (வயது 25). சம்பவத்தன்று இவர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சுபஸ்ரீ அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்தவர்களை தேடி வருகின்றனர்.


Next Story