செங்கல்பட்டு அருகே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கள்ளக்காதலியை தீவைத்து எரித்த வாலிபர்


செங்கல்பட்டு  அருகே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கள்ளக்காதலியை தீவைத்து எரித்த வாலிபர்
x

செங்கல்பட்டு அருகே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரம் அடைந்த லாலிபர் கள்ளக்காதலியை தீ வைத்து எரித்தார்.

செங்கல்பட்டு

கள்ளக்காதல்

செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் ஊராட்சி, பகத்சிங் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் செல்வம் (வயது 32). இவருக்கு திருமணமாகி பிரியா (28) என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணமான பிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குள்ளா என்கிற பிரதாபுக்கும் (35) இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் பிரதாபின் மனைவிக்கு தெரிய வந்தது. பின்னர் தன்னுடைய அண்ணனை வைத்து பிரதாபை கண்டித்தார். இதனால் கடந்த ஒரு மாதமாக பிரதாப் தனது கள்ளக்காதலி பிரியாவிடம் பேசுவதை நிறுத்தினார்.

தீ வைத்து கொளுத்தினார்

இதனிடையே பிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து பிரியாவிடம் பிரதாப் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பிரதாபை பார்க்கும் இடத்திலெல்லாம் பிரியா ஆபாசமாக திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரதாப் அவரை கொலை செய்ய திட்டமிட்டு பிரியா வீட்டில் தனியாக இருந்தபோது அவர் மேல் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பரபரப்பு

இதனையடுத்து பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பிரியாவின் கணவர் அருண் செல்வம் மற்றும் அக்கம் பக்கத்தினர் பிரியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பிரியாவின் முகம், தலை, கழுத்து, கை மற்றும் கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலூர் போலீசார் கள்ளக்காதலி பிரியாவை மண்எண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் பிரதாப்பை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story