மது விற்ற வாலிபர் கைது
மது விற்ற வாலிபர் கைது
கன்னியாகுமரி
குழித்துறை:
மார்த்தாண்டம் பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் அருகே புல்லாணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேப்படும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த பத்மசீலன்(வயது35) என்பதும், மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story