தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்


தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்
x

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் வாசுகிபுரம் ஆதிதிராவிடர் குடும்பங்கள் 42 பேருக்கு 1995-ம் ஆண்டு அரசால் வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டாக்களை வருவாய்க் கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்பகுதியில் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு வீட்டுவரி ரசீது வழங்க வேண்டும். வாழ்வாதாரம் இல்லாத ஏழை பட்டியலின மக்கள் 42 பேருக்கும் தாட்கோ மூலம் இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமயம் தாசில்தார் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சலோமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர், விவசாய சங்க மாவட்டத்தலைவர் பொன்னுசாமி ஆகியோர் பேசினர். இதில், சி.ஐ.டி.யூ., இந்திய மாணவர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருமயம் தாசில்தார் புவியரசன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story