சென்னை மெட்ரோவில் சுமார் 150 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என தகவல்


சென்னை மெட்ரோவில் சுமார் 150 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என தகவல்
x
தினத்தந்தி 24 July 2023 9:25 AM IST (Updated: 24 July 2023 11:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோவில் சுமார் 150 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊர்களிலிருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 3,343 சிசிடிவி கேமராக்களில், சுமார் 150 கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பழுதாகியுள்ள கேமராக்கள் விரைவில் நீக்கப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வாகன நிறுத்துமிடம் பகுதிகளில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்தவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

1 More update

Next Story