மெட்ரோ ரெயிலில் மே மாதம் 48 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்


மெட்ரோ ரெயிலில் மே மாதம் 48 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்
x

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மே மாதம் மட்டும் 48 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்களை இயக்கி வருகிறது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் வருகிற 2025-ம் ஆண்டு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் ரெயில்களை இயக்க முடிவு செய்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் முதல் கட்டமாக இயக்கப்பட்டு வரும் 2 வழித்தடங்களில் கடந்த மே மாதம் 47 லட்சத்து 87 ஆயிரத்து 846 பயணிகள் பயணம் செய்தனர். அதிகபட்சமாக கடந்த மாதம் 26-ந்தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 720 பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 516 பயணிகள் அதிகம் பயணம் செய்து உள்ளனர்.

செல்போன் மூலம் பெறப்படும் 'கியூஆர்' குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 11 லட்சத்து 58 ஆயிரத்து 93 பேர் பயணம் செய்தனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story