திருத்தணியில் போலீஸ்காரரை வெட்டிய வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது


திருத்தணியில் போலீஸ்காரரை வெட்டிய வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
x

திருத்தணியில் போலீஸ்காரரை வெட்டிய வழக்கில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேல்ரோடு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் ஜாபர் அலி. கடந்த 13-ந் தேதி திருத்தணி கச்சேரி தெருவை சேர்ந்த சந்துரு (வயது 20), பி.ஆர்.பள்ளியைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் (23) ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஜாபர் அலியை பட்டாகத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தனர். அவர்களிடமிருந்து வெட்டு காயங்களுடன் ஜாபர் அலி தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அந்த வாலிபர்கள் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் திருத்தணியை சேர்ந்த போலீஸ்காரர் சுரேந்தரை கத்தியால் கையில் வெட்டி அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். இதேபோல் காந்தி ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பழனி, வஜ்ரவேல், தினேஷ் ஆகியோரை பட்டா கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்தனர்.

இது தொடர்பாக ஷியாம் சுந்தர், சஞ்சய் குமார், கிஷோர், சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சந்துருவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story