வேகமெடுக்கும் புயல்: கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


வேகமெடுக்கும் புயல்: கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 9 Dec 2022 10:32 AM IST (Updated: 9 Dec 2022 10:36 AM IST)
t-max-icont-min-icon

புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர்,

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலியால், கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகிறது. புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்படும் கடும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் 4வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


Next Story