தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர்

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 30-ந் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டும் அன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி தியாகிகள் தினமான நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையிலும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். மேலும் சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


Next Story