மனித கடத்தல் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலையில் நடந்த பயிற்சி பட்டறையில் மனித கடத்தல் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவண்ணாமலையில் நடந்த பயிற்சி பட்டறையில் மனித கடத்தல் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச மனித கடத்தல் ஒழிப்பு குறித்த பயிற்சி பட்டறை திருவண்ணாமலையில் நடைபெற்றது.
சைல்டு லைன் திட்ட இயக்குனர் எஸ்.முருகன், இயக்குனர் செழியன் (டி.டி.எச்) ஆகியோர் குழந்தை கடத்தப்படுதல் மற்றும் கொத்தடிமை குறித்து விளக்கி பேசினர்.
இதில் தொழிலாளர் உதவி ஆணையர் எஸ். மீனாட்சி, சமூக நல அலுவலர் மீனாம்பிகை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன் ஆகியோர் மனித கடத்தல், கொத்தடிமை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மனித கடத்தலுக்கு உதவியாக உள்ள தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பயிற்சி பட்டறையில் சமூக விரிவாக்க அலுவலர்கள், கல்வி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மனித கடத்தல் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டு, கையெழுத்து இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது. முடிவில் நிர்வாகி எலிசபெத் நன்றி கூறினார்.