கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் தொழிலாளர் நல துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமீதுல்லா (நிலம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, அலுவலக மேலாளர் கணேசன் (பொது), தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story