வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
x

வடபாதிமங்கலம் அரசு பள்ளியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடந்தது

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வடபாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று வாக்காளர்கள் தினத்தையொட்டி வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியரும், வாக்காளர் நிலை அலுவலருமான சாந்தி தலைமை தாங்கினார்.

இதில், அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story