தர்மபுரியில்பலத்த காற்றுக்கு மரம் விழுந்து 2 பேர் படுகாயம்


தர்மபுரியில்பலத்த காற்றுக்கு மரம்  விழுந்து 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:30 AM IST (Updated: 11 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி நகரில் கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்காள் ஏரிக்கரை பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. நேற்று மதியம் வீசிய பலத்த காற்றால் அந்த பகுதியில் உள்ள ஒரு மரம் வேரோடு சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது. இதில் காரில் இருந்த பாப்பாரப்பட்டி சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 45), மோட்டார் சைக்கிளில் வந்த கடகத்தூர் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (55) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மரம் சாய்ந்ததால் கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story