கார் மோதி மூதாட்டி பலி


கார் மோதி மூதாட்டி பலி
x

கார் மோதி மூதாட்டி பலியானார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பட்டர்பிளை பாலம் வழியாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த மூதாட்டி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story