தொப்பூர் கணவாயில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் காயம்


தொப்பூர் கணவாயில்  டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து  டிரைவர் காயம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் காயம்

தர்மபுரி

நல்லம்பள்ளி:

மும்பையில் இருந்து பவானிக்கு திராவகம் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி புறப்பட்டது. இந்த லாரியை மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் யாதவ் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தொப்பூர் கணவாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியில் இருந்து திராவகம் கசிவு ஏற்பட்டதால் தர்மபுரி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியை போலீசாருடன் மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story