கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 1 May 2023 7:15 PM GMT (Updated: 1 May 2023 7:15 PM GMT)
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

சரக்கு வேனில் மோதியது

தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அருகே உள்ள ஏ.குமாரம்பட்டியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (வயது 55). இவர் மொபட்டில் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்டேகுப்பம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எந்தவித சிக்னலும் போடாமல் இடதுபுறமாக திரும்பியது. இதனால் மொபட் நிலைதடுமாறி சரக்கு வேனில் மோதியது. இந்த விபத்தில் சந்தான கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான சந்தான கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர்

சூளகிரி தாலுகா சாமனப்பள்ளி அருகே உள்ள சீபத்தை சேர்ந்தவர் ராமன் (25). இவர் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை- உலகம் சாலையில் கடந்த 29-ந் தேதி மாலை சென்று கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு ராமன், மணிகண்டன் ஆகியோர் உடன் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று ராமன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த மற்றொரு ராமன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story