ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது விபத்து- 2 பேர் பலி


ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது விபத்து- 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Feb 2024 4:33 PM IST (Updated: 28 Feb 2024 4:38 PM IST)
t-max-icont-min-icon

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

காட்பாடி,

காட்பாடி செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமாதீன்(வயது 65) இவரது மனைவி சுபைதா (62 )

கமாதீன் தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் ஆசிகா (13 )அபுதாகிர் (9 )ஆகியோருடன் ஒரு சொகுசு காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். காரை அவர்களது பகுதியைச் சேர்ந்த நவாஸ் ஓட்டினார்.

இவர்கள் சென்ற கார் பவானி அருகே அதிகாலை 4 மணியளவில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரின் முன்னாள் அமர்ந்திருந்த கமாதீன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் அவரது பேரன் அபுதாகிர் மற்றும் ஓட்டுனர் நவாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபுதாகிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிரைவர் நவாஸ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story